விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், பிணையில் விடுவிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனை, கல்கிஸை பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அனுப்பி வைத்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விளக்கமறியலில் தற்போதுள்ள நடைமுறைக்கு அமையவே அவர், இவ்வாறு ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
பிணையில் விடுவிக்கப்படுவோர் 14 நாட்கள் சிறைச்சாலையிலுள்ள தனி பிரிவொன்றில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ரிஷாட் பதியூதீனிற்கு பி.சி.ஆர் பரிசோதனை நடத்தி, கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர், அவரை விடுவிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விளக்கமறியலில் பரிசோதனைகள் நடத்தப்பட்டு, பெறுபேறு வெளிவருவதற்கு முன்னர், அவர் கல்கிஸை பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,