நாட்டில் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
மது போதையில் வாகனங்களை செலுத்துதல், வேகமாக வாகனங்களை செலுத்துதல், கவனயீனமாக வாகனங்களை செலுத்துதல் விபத்துக்கள் அதிகரிப்பதற்கான காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களினால் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30 பேர் காயமடைந்துள்ளனர். (TrueCeylon)