கொரோனா தொற்று நாட்டில் பரவுவதற்கு முன்னாரான காலத்தில் பதிவான விதத்தில், மீண்டும் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்றைய தினத்தில் மாத்திரம் இடம்பெற்ற வாகன விபத்துக்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
இவர்களில் 7 பேர் வாகன விபத்து இடம்பெற்ற இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், ஏனைய மூவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
வாகன விபத்துக்களில் 10 பேர் உயிரிழக்கும் சம்பவங்கள், கொவிட் தொற்றுக்கு முன்னரான காலப் பகுதியிலேயே பதிவாகியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் பண்டிகை காலங்களில் மது போதையில் வாகனங்களை செலுத்துவோரை கைது செய்வதற்கான விசேட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறுகின்றார். (TrueCeylon)
News Sources :- NewsWire