வவுனியா − செட்டிக்குளம் வனப் பகுதியில் இராணுவத்திற்கும், ஆயுதங்களுடன் இருந்த குழுவொன்றுக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் ஆயுதங்களுடன் இருந்த மூவர், இராணுவத்தை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
வில்பத்து வனப் பகுதியில் கடமைகளுக்காக சென்ற இராணுவத்தின் மீதே துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து, செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
36 வயதான செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த அன்டனி ஜெறின் என்ற நபரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
சம்பத்தில் துப்பாக்கி பிரயோகம் நடத்திய ஏனையோர் தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேகநபர்களை கைது செய்பவதற்கான நடவடிக்கைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். (TrueCeylon)
Discussion about this post