வத்தளை நகரில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று (18) காலை இடம்பெற்றதாக வத்தளை பொலிஸார், ட்ரூ சிலோனுக்கு தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்த பெண் வீதி கடவையில், வீதியை கடக்க முயற்சித்த சந்தர்ப்பத்தில் லொறியொன்று அவர் மீது மோதியுள்ளது.
இதையடுத்து, காயமடைந்த குறித்த பெண், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
வத்தளை பகுதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயான சசிகலா ஜெயதீஸ்வரன் என்ற ஆசிரியை ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இந்த விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (TrueCeylon)
Discussion about this post