வட மாகாணத்தில் முதலாவது கொவிட் உயிரிழப்பு இன்று பதிவாகியுள்ளது.
வவுனியா – பெரிய உலுக்குளம் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இருதய நோயாளரான குறித்த பெண், கடந்த சில தினங்களுக்கு முன்னர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் நிலைமை கவலைக்கிடமான நிலையில், அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
பி.சி.ஆர் பரிசோதனையின் பிரகாரம், குறித்த பெண்ணுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இதையடுத்து, வவுனியா வைத்தியசாலையிலிருந்து, அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த பெண்ணுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய பல குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், வவுனியா வைத்தியசாலையின் நிர்வாகத்திலுள்ள சிலரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
வடக்கில் கொவிட் 2ஆவது அலையினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 239 என கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயலணியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (TrueCeylon)