பிக்பாஸ் புகழ் லொஸ்லியா மரியநேசன், இலங்கையை வந்தடைந்துள்ளார்.
லொஸ்லியா இலங்கையை வந்தடைந்துள்ளதாக அவரது நண்பர் தனது டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கு வருகைத் தந்துள்ள லொஸ்லியா, 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தனிமைப்படுத்தலின் பின்னர், லொஸ்லியா, தனது குடும்பத்தாரை சந்திப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
#Losliya இலங்கை வந்துவிட்டார். அவர் 14 நாட்கள் இலங்கை தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கிணங்க தனிமைப்படுத்தலில் இருந்து பின் தன் குடும்பத்தை சந்திப்பார். தகவல்களை கேட்டறிந்து கொள்ளும் அனைத்து சொந்தங்களுக்கும் நன்றி. #Losliya #LosliyaArmy #KavinArmy @ikamalhaasan @vijaytelevision
— Fazlullah Mubarak (@FazlullahMTV) November 22, 2020
லொஸ்லியாவின் தந்தை மரியநேசன், சுகயீனம் காரணமாக கடந்த வாரம் காலமானார்.
கனடாவிலுள்ள தனது வீட்டில் வைத்தே, அவர் உயிரிழந்திருந்தார்.
மாரடைப்பே உயிரிழப்புக்கான காரணம் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
மரியநேசனின் பூதவுடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.