பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் உள்ளிட்ட மேலும் இருவர் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கோட்டை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்தே, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் காலப் பகுதியில் இடம்பெயர்ந்தோரை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களின் ஊடாக வாக்களிக்க அழைத்து சென்றதன் ஊடாக, அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் ரிஷாட் பதியூதீன் கைது செய்யப்பட்டுள்ளார்.