கொவிட் வைரஸ் பரவல் காரணமாக கடந்த காலங்களில் மீன் விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது.
மீன் விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்ட போதிலும், உள்நாட்டு ரின் மீன் (செமன்) உற்பத்தி வெகுவாக அதிகரித்துள்ளதாக உள்நாட்டு ரின் மீன் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
கொவிட் தொற்றின் 2ஆவது அலை ஏற்பட்ட காலப் பகுதியில் மாத்திரம், சுமார் 1000 மெற்றிக் தொன் மீன்கள், உள்நாட்டு ரின் மீன் உற்பத்தியாளர்களினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட மீன்களை பயன்படுத்தி, நாளாந்தம் சுமார் ஒரு லட்சம் மீன் ரின்கள் உற்பத்தி செய்யப்படுவதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் நாளாந்த ரின் மீன் பயன்பாடு, 2 லட்சத்து 75 ஆயிரம் என கணிப்பிடப்பட்டுள்ளது.
ரின் மீன்களுக்காக இறக்குமதி வரி குறைக்கப்பட்டதன் பின்னர், 3 லட்சம் ரின் மீன்கள் மாத்திரமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
உள்நாட்டு ரின் மீன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன், இறக்குமதி செய்யப்படும் ரின் மீனுக்காக விசேட பொருளுக்கான வரி 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டிருந்தது.
உள்நாட்டில் 7 ரின் மீன் உற்பத்தியாளர்கள் இருக்கின்றனர்.
இவர்களுக்கு ரின் மீன்களுக்கான ரின்களை கொள்வனவு செய்வதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அறிய முடிகின்றது.
அத்துடன், உள்நாட்டின் மீன்களை கொள்வனவு செய்யும்போது, மீன்களுக்கான கட்டுப்பாட்டு விலையொன்று நிர்ணயிக்கப்படும் பட்சத்தில், உள்நாட்டு ரின் மீன் தேவையை சிறந்த முறையில் பூர்த்தி செய்ய முடியும் என உள்நாட்டு ரின் மீன் உற்பத்தியாளர்கள் நம்பிக்கை வெளியிடுகின்றனர்.