இரண்டாவது இணைப்பு
ராஜகிரிய பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் காணாமல் போன மற்றுமொரு நபரும் மீட்கப்பட்டுள்ளார்.
இன்று காலை மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் காணாமல் போயிருந்தனர்.
இதில் ஒருவர் காலையிலேயே மீட்கப்பட்டதுடன், மற்றைய நபர் பல மணித்தியால பிரயத்தனத்திற்கு மத்தியில் காப்பாற்றப்பட்டுள்ளார்.
முதலாவது இணைப்பு
ராஜகிரிய – களுபலுவாவ பகுதியில் மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
களுபாலுவாவ – அக்கோன பகுதியில் கட்டடமொன்று நிர்மாணிக்கப்பட்டு வரும் பகுதியிலேயே மண்மேடொன்று சரிந்து வீழந்;துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் 2 பேர் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதுடன், அவர்களில் ஒருவரை பிரதேச மக்கள் மீட்டுள்ளனர்.
சம்பவத்தில் ஒருவர் காணாமல் போயுள்ளதுடன், அவரை மீட்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. (TrueCeylon)
Discussion about this post