திட்டமிடப்பட்ட அனைத்து ரயில் சேவைகளும் வார இறுதி நாட்களில் ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 14ஆம் திகதி மற்றும் 15ஆம் திகதிகளில் திட்டமிடப்பட்ட அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, வார இறுதி நாட்களில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர வேறு இடங்களில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் இதுவரை தீர்மானம் எட்டப்படவில்லை என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.