முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நல்லாட்சி அரசாங்கத்தில் முக்கிய பொறுப்புக்களை வகித்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோருக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டின் கீழ் சட்ட நடவடிக்கைகளை தொடர வேண்டும் என ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோ, முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் தேசிய புலனாய்வுத்துறையின் முன்னாள் பிரதானி சிசிர மென்டீஸ் ஆகியோருக்கு எதிராகவும், குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடு்க்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்திலும், அதனை பொருட்படுத்தாது செயற்பட்டமையினாலேயே, ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
270 உயிர்கள் காவுக்கொள்ளப்பட்டமைக்கு பொறுப்பு கூற வேண்டிய அதிகாரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, இனவாத மற்றும் மதவாத கருத்துக்களை பிரசாரம் செய்தவர்களை கைது செய்யாத அதிகாரிகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை முன்வைத்துள்ளது. (TrueCeylon)
Discussion about this post