ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி யாருக்கு வழங்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் கட்சிக்குள் தற்போது தீர்மானமொன்று எட்டப்பட்டுள்ளது.
கட்சியின் செயற்குழு கூடிய சந்தர்ப்பத்தில், அங்கிருந்த 19 பேரும், பாராளுமன்றத்திற்கு ரணில் விக்ரமசிங்கவை அனுப்ப வேண்டும் என்ற நிலைப்பாட்டை எட்டியுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்;கே பண்டார தெரிவிக்கின்றார்.
ரணில் விக்ரமசிங்கவை வேண்டாம் என்றவர்களுக்கு, ரணில் விக்ரமசிங்க இன்றி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியவில்லை என அவர் கூறியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க இல்லாமல், நாட்டை ஒரு வருடம் கூட சரியாக கொண்டு செல்ல முடியவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.
ரணில் விக்ரமசிங்க இல்லாமல், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்பதை நாட்டு மக்கள் தற்போது புரிந்துக்கொண்டுள்ளனர் என பாலித்த ரங்கே பண்டார கூறியுள்ளார்.