நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது பாராளுமன்ற உறுப்புரிமை பறிபோகும் என தேர்தல்கள் செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஞ்ஜன் ராமநாயக்கவின் பதவி பறி போகும் பட்சத்தில், அந்த இடத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் அஜித் மான்னப்பெரும நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பிலான ஆவணம் சபாநாயகருக்கு கிடைத்ததன் பின்னர், இந்த வெற்றிடம் பூர்த்தி செய்யப்படும் என அறிய முடிகின்றது.
பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் இந்த விடயம் தொடர்பிலான அறிவிப்பு, தேர்தல்கள் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர், வெற்றிடத்திற்கு நியமிக்கப்படவுள்ள பாராளுமன்ற உறுப்பினரின் பெயர் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது (TrueCeylon)
Discussion about this post