நடிகர் ரஜினி காந்தின் கட்சியின் பெயர் இன்று பதிவு செய்யப்படவுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக சட்டத்தரணிகளுடன், மன்ற நிர்வாகிகள் சிலர் டெல்லி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் நடிகர் ரஜினி காந்தின் அரசியல் பிரவேசம் தற்போது சூடு பிடித்துள்ளது.
கடந்த சில நாட்களாக முக்கியஸ்தர்கள் சிலருடன் அவர் கலந்துரையாடியுள்ளார்.
இதற்கமைய, கட்சிக்கு பெயர்கள் சில பரிசீலிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஒன்றை அவர் தெரிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறித்த பெயர் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையகத்தில் இன்று பதிவு செய்யப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதேவேளை, கட்சி கொடியில் வெள்ளை நிறம் பிரதானமாக இருக்கும் எனவும் கூறப்படுகின்றது.