கஹதுடுவ – மாகம்மன தர்மலங்கார பகுதியில் யுவதியொருவரை கடத்த முயற்சித்த இராணுவ சிப்பாய் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சந்தேகநபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யுவதியில் இருப்பிடத்திற்கு அழைத்து செல்வதாக கூறி, முச்சக்கரவண்டியொன்றில் இராணுவ சிப்பாய் அவரை அழைத்து சென்றுள்ளார்.
தனது இடம் வந்துவிட்டதாக தெரிவித்து, முச்சக்கரவண்டி நிறுத்துமாறு யுவதி, கூறிய போதிலும், முச்சக்கரவண்டியை நிறுத்தாது, சந்தேகநபர் செலுத்தியுள்ளார்.
இதையடுத்து, குறித்த யுவதி முச்சக்கரவண்டியிலிருந்து வெளியில் பாய்ந்து, கூச்சலிட்டுள்ளார்.
இந்த நிலையில், சம்பவ இடத்தில் பிரதேச மக்கள் ஒன்று கூடி, குறித்த சந்தேகநபரை பிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஹோமாகம தனியார் நிறுவனமொன்றில் கடமையாற்றும் 20 வயதான யுவதியொருவரே இந்த சம்பவத்தை எதிர்நோக்கியுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த கஹதுடுவ பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். (TrueCeylon)
Discussion about this post