இலங்கையிலுள்ள இரண்டு மனித உரிமை செயற்பாட்டளர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பாணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தினால், கோட்டாபய ராஜபக்ஷவிற்கு 2019ஆம் ஆண்டு அழைப்பு விடுக்கப்பட்டது.
குறித்த இருவரும் 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து காணாமல் போயிருந்தனர்.
சர்வதேச மனித உரிமை தினத்திற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னரே, லலித் மற்றும் குகன் காணாமல் போயிருந்தனர்.