இலங்கை : யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்கால் நினைவு தூபி இடிக்கப்பட்டமை எதிராக யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் வலுப் பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இரவிரவாக தொடர்ந்தும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மாவீரர் நினைவிடம் மற்றும் பொங்குத்தமிழ் நினைவிடம் ஆகியவற்றை இடிப்பதற்கான முயற்சிகள் முறியடிக்கப்பட்ட போதிலும், மீண்டும் அந்த நினைவிடங்கள் இடிக்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
நிரந்தர தீர்மானமொன்றை வழங்கும் வரை போராட்டத்தை தொடர போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். (TrueCeylon)
Discussion about this post