யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை கரையோர பகுதியில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரம் சரிந்து வீழ்ந்துள்ளது.
காங்கேசன்துறை பகுதியில் நிலவும் காற்றுடனான வானிலையை அடுத்தே, குறித்த கோபுரம் சரிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த கோபுரம் மிக நீண்ட நாட்களாக கவனீபாரற்ற நிலையில் காணப்பட்டதன் காரணமாகவே, சரிந்து வீழ்ந்துள்ளதாக பிரதேச மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர். (TrueCeylon)