மசினகுடியில் உயிரிழந்த காட்டு யானை காதில், கடந்த 3 ஆம் திகதி வாழைத்தோட்டம் பகுதியில் தீ வைத்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ரிசார்ட் உரிமையாளர் உட்பட இருவரை கைது செய்துள்ள வனத்துறையினர் ஒருவரை தேடி வருகின்றனர்.
இந்தியாவின் நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் முதுகு மற்றும் காது பகுதியில் காயங்களுடன் காட்டு யானை ஒன்று சுற்றித்திரிந்தது. கடந்த 18 ஆம் திகதி யானையின் காதின் ஒருபகுதி துண்டாகி விழுந்தது.
காதில் இருந்து பல லிட்டர் ரத்தம் வெளியேறியது. இதனை தொடர்ந்து கடந்த 19 ஆம் திகதி சிகிச்சை அளிப்பதற்காக யானை மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகள் உதவியுடன் பிடிக்கப்பட்டது.
யானை சிகிச்சைக்காக முதுமலை வளர்ப்புகள் யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லும் வழியில் லாரியில் யானை உயிரிழந்துள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யானையின் உடல் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது அதர்ச்சி தகவல் வெளியானது. யானையின் காதில் சமூக விரோதிகள் சிலர் பெட்ரோல் கொண்டு தீயை வைத்து காயப்படுத்தியது தெரியவந்தது.
இதன் காரணமாக ஏற்பட்ட காயத்தில் இருந்து ரத்தம் அதிகளவில் வெளியேறி அதன் காரணமாக இறந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து யானையின் மீது தீ வைத்தவர்களை கண்டறிந்து கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது.
விசாரணையில் மாவநல்லா பகுதியை சேர்ந்த ரிசார்ட் உரிமையாளர் ரேமன்ட் டீன் அவரது சகோதரர் ரிக்கி ராயன் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பிரசாந்த் ஆகியோர் இணைந்து யானையின் மீது டவல் மற்றும் மண்ணெண்ணெய் கொண்டு தீ வைத்தது தெரியவந்தது.
இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. இதன் இடையே வீடியோவை கைப்பற்றி வனத்துறையினர் ரகசிய விசாரணை நடத்தி ரைமன் மற்றும் பிரசாந்தை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மாவநல்லா பகுதிக்கு சென்ற யானை அவர்களது காரை தாக்கி சேதப்படுத்தியுள்ளது.
இதனால் கோபம் கொண்ட அவர்கள் அன்று இரவு யானை ரிசார்ட் அருகில் வந்த போது தீ வைத்துள்ளனர்.
மறுநாள் காலை ஒன்றும் தெரியாதது போல வனசரகரை தொடர்பு கொண்டு யானை தங்களது காரை சேதப்படுத்தி விட்டதாகவும் புகார் அளித்துள்ளனர்.
தீ காயம் பட்ட யானை வலியில் துடித்து ஒருநாள் முழுவதும் அடர் வனப்பகுதிக்குள் சென்றுள்ளது.
இதனால் ஊர் மக்களை தவிர வேறு யாருக்கும் இந்த சம்பவம் தெரியாமல் இருந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள ரிசார் உரிமையாளர்களின் தந்தை MUDUMALAI NATURE CONSERVATION PROTECTION SOCIETY யின் முக்கிய பொறுப்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது. இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே மாவநல்லா பகுதியில் குடியேறியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post