மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த ஒருவர், வீதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாணந்துரை தெற்கு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் நேற்று மாலை இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாணந்துரை – பின்வத்த பகுதியைச் சேர்ந்த 80 வயதான நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலி வீதியிலிருந்து கரையோர வீதியாக பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
சடலம் பாணந்துரை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.