கொழும்பு – மட்டக்குளி பகுதியை தளமாகக் கொண்டு இயங்கும் மோட்சம் அமைப்பினால், மலையக மாணவர்களுக்கான இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கொட்டபொல இலக்கம் 02 தமிழ் வித்தியாலயம், லிந்துலை சிவானி தமிழ் வித்தியாலயம், டெல் தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கே இவ்வாறு இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கொட்டபொல இலக்கம் 02 தமிழ் வித்தியாலயத்தில் சுமார் 100 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த கற்றல் உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வை தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகளும் பாடசாலையில் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இதேவேளை, லிந்துலை சிவானி தமிழ் வித்தியாலயம், டெல் தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி பயிலும் 100ற்கும் அதிகமான மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கொழும்பு மற்றும் வெளிநாடுகளில் வாழும் உறவினர்களினால் வழங்கப்பட்ட நிதி உதவிகளின் ஊடாக இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதாக மோட்சம் அமைப்பினர் ட்ரூ சிலோன் செய்திப் பிரிவிற்கு தெரிவித்தனர். (TrueCeylon)
Discussion about this post