இம்முறை கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக மாத்திரம் மேல் மாகாணத்திலுள்ள 907 பாடசாலைகளை, எதிர்வரும் 25ம் திகதி திறப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.
மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை திறப்பதற்கு காணப்படும் இயலுமை குறித்து நேற்று இடம்பெற்ற சந்திப்பிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்திலுள்ள ஏனைய பாடசாலைகளை திறப்பது குறித்து தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும், மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள், சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களுக்கு அமைய, பெப்ரவரி மாதம் 15ம் திகதி அளவில் திறப்பதற்கு ஆலோசிக்கப்படுவதாக கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. (TrueCeylon)
Discussion about this post