மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ம் திகதியளவில் ஆரம்பிக்க திட்டமிட்டு வருவதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்திலுள்ள 900 பாடசாலைகளையே இவ்வாறு ஆரம்பிக்க திட்டமிட்டு வருவதாகவும் அவர் கூறுகின்றார்.
இதேவேளை, மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர்ந்த ஏனைய பகுதிகளிலுள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று (25) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளே இவ்வாறு ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.
சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக மேல் மாகாணத்திலுள்ள 907 பாடசாலைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவிக்கின்றார்.
அதேபோன்று, மேல் மாகாணத்தை தவிர்ந்த ஏனைய அனைத்து பகுதிகளிலும் மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கான அனுமதி இன்று முதல் வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, மேலதிக வகுப்புக்களை நடத்துமாறு சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவிக்கின்றார். (TrueCeylon)
Discussion about this post