கொவிட் தொற்றினால் மேல் மாகாணம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றைய தினத்தில் அடையாளம் காணப்பட்டவர்களில் சுமார் 400திற்கும் அதிகமானோர் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொவிட்-19 தடுப்புக்கான செயற்பாட்டு மையத்தின் அறிக்கையின் பிரகாரம், நேற்றைய தினத்தில் மாத்திரம் மேல் மாகாணத்தில் 446 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்று முழுமையாக 545 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது,
இதில் கொழும்பு மாவட்டத்தில், களுத்துறை மாவட்டங்களிலேயே அதிகளவிலான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதற்கு அடுத்தப்படியாக கண்டி மாவட்டத்திலேயே அதிகளவிலான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். (TrueCeylon)