மேல் மாகாணத்தில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பாக திங்கட் கிழமை அறிவிக்க உள்ளதாக கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு இதனை கூறியுள்ளார்.
மேல் மாகாணத்தில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பாக சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார துறையின் நிபுணர்களை சந்தித்து கலந்துரையாடியதாகவும் இந்த அனைத்து விடயங்களையும் ஆராய்ந்து எடுக்கும் தீர்மானத்தை திங்கட் கிழமை அறிவிக்க உள்ளதாகவும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.(Trueceylon)