இலங்கை: மேல் மாகாணத்தில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் அறிக்கையின் பிரகாரம், கடந்த 24 மணித்தியாலங்களில் மேல் மாகாணத்தில் 138 தொற்றாளர்கள் மாத்திரமே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் 81 தொற்றாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 30 தொற்றாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 27 தொற்றாளர்களும் மாத்திரமே நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் 56 தொற்றாளர்களும், திருகோணமலை மாவட்டத்தில் 20 தொற்றாளர்களும், நுவரெலியா மாவட்டத்தில் 18 தொற்றாளர்களும் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் தலா 14 தொற்றாளர்கள் அடையாளம் காணப்படடுள்ளனர். (TrueCeylon)
Discussion about this post