மேல் மாகாணத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கு சென்ற 451 பேருக்கு நடத்தப்பட்ட ரெபிட் என்டிஜன் பரிசோதனைகளில் ஐவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
எழுமாறாக நடத்தப்பட்ட பரிசோதனைகளிலேயே இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேல் மாகாணத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கும் செல்வோருக்கு, எழுமாறாக ரெபிட் என்டிஜன் பரிசோதனைகளை நடத்தும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டன.
இதன்படி, ஐந்து இடங்களில் இந்த பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக இராணுவ தளபதி மேலும் கூறினார். (TrueCeylon)