மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் நபர்களுக்கு இன்று முதல் என்டிஜன் பரிசோதனைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, நடமாடும் என்டிஜன் பரிசோதனை மையங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
பொது போக்குவரத்தை பயன்படுத்தி, மேல் மாகாணத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கு செல்லும் நபர்களுக்கு, இவ்வாறு இடைக்கிடை பரிசோதனைகளை நடத்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
வாகனமொன்றில் செல்லும் ஓரிருவருக்கு என்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டு, அவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், குறித்த வாகனத்திலுள்ள அனைவருக்கும் என்டிஜன் பரிசோதனை நடத்தப்படும் என இராணுவ தளபதி மேலும் கூறினார். (TrueCeylon)