பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள மேல் மாகாணத்திலிருந்து வெளி பகுதிகளுக்கு செல்லும் நபர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் நபர்கள், குறித்த பிரதேசத்திலுள்ள சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய தனிமைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவதற்கு நேற்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டது.
அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் நபர்களை தவிர, வேறு நபர்களுக்கு மேல் மாகாணத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.