யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் நேற்றைய தினம் எந்தவொரு கொவிட் தொற்றாளரும் பதிவாகவில்லை என கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
இந்த ஐந்து மாவட்டங்களை தவிர, ஏனைய 20 மாவட்டங்களிலும் நேற்றைய தினம் கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மேல் மாகாணத்திலேயே நேற்றைய தினத்திலும் அதிகளவிலான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
இதன்படி, மேல் மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தில் நேற்று 157 கொவிட் தொற்றாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 163 கொவிட் தொற்றாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 82 கொவிட் தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.
மேலும், கண்டி மாவட்டத்தில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 82 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
குருநாகல் மாவட்டத்தில் 108 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை, காலி மாவட்டத்தில் 54 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், கேகாலை மாவட்டத்தில் 38 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏனைய மாவட்டங்களில் குறிப்பிடத்தக்களவு கொவிட் தொற்றாளர்களே அடையாளம் காணப்பட்டுள்ளனர். (TrueCeylon)
Discussion about this post