பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிமுறைகள் அடங்கிய திட்டமொன்று தயாரிக்கப்படும் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவிக்கின்றது.
சுகாதார வழிகாட்டலின் கீழ் மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த பிரிவின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவிக்கின்றார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். (TrueCeylon)
Discussion about this post