இலங்கை : மேலதிக நேர வகுப்புக்களை நடத்துவதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, ஜனவரி 25ம் திகதி முதல் மேலதிக நேர வகுப்புக்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தை தவிர, நாட்டின் ஏனைய அனைத்து பகுதிகளுக்கும் இந்த அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக நேர வகுப்பொன்றில் அதிகபட்சமாக 100 மாணவர்கள் மாத்திரமே அனுமதிக்க முடியும் என சுகாதார அமைச்சு குறிப்பிடுகின்றது.
அவ்வாறு இல்லையென்றால், வகுப்பொன்றிற்கு 50 வீதமான மாணவர்களையே அனுமதிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி பொது தராதர சாதார தரம் மற்றும் உயர் தர வகுப்பு மாணவர்கள் மாத்திரம் முதற்கட்டமாக மேலதிக நேர வகுப்புக்களை ஆரம்பிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. (TrueCeylon)
Discussion about this post