முஸ்லிம் பெண்களை தொழிலில் ஈடுபடுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் நியூஸிலாந்து பொலிஸ் மகளிர் பிரிவிற்கு ஹிஜாப் ஆடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, நியூஸிலாந்து பொலிஸில் அண்மையில் இணைந்த சீனா அலி, முதல் முறையாக ஹிஜாப் பொலிஸ் ஆடையை அணிந்துள்ளார்.
தமது நாட்டிலுள்ள அனைத்து இனத்தவரையும் சேவையில் இணைத்துக் கொண்டு முன்னோக்கி பயணிப்பது, தமது நோக்கம் என பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
லண்டன் மெட்ரோ பொலிட்டன் பொலிஸ் மற்றும் ஸ்கொட்லாந்து பொலிஸ் ஆகியவற்றில் தேவையென்றால், ஹிஜாப் ஆடையை அணிவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
லண்டன் மெட்ரோ பொலிஸார் 2006ஆம் ஆண்டும், ஸ்கொட்லாந்து பொலிஸார் 2016ஆம் ஆண்டும் பொலிஸ் மகளிர் பிரிவிற்கு ஹிஜாப் ஆடையை அறிமுகப்படுத்தியிருந்தனர்.
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா பொலிஸில் இணைந்த மஹா சுக்கார் என்ற பெண் அதிகாரி, 2004ஆம் ஆண்டு ஹிஜாப் ஆடையுடன் தனது பொலிஸ் கடமைகளை முன்னெடுத்துள்ளார்.
பாடசாலை கடமைகளுக்காக சென்ற பொலிஸ் அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைய, 2018ஆம் ஆண்டு இறுதிக் காலப் பகுதியில் ஹிஜாப் ஆடை அணிவது அனுமதிக்கப்பட்டதாக நியூஸிலாந்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், பொலிஸ் அதிகாரியான சீனா அலி, தனது பொலிஸ் சீருடையில் ஒரு பகுதியை மாத்திரம் ஹிஜாப் ஆடையை அணிந்த முதலாவது அதிகாரியாக கருதப்படுகின்றார்.