முல்லைத்தீவு – வவுனிகுளம் பகுதியில் கெப் வாகனமொன்று, குளத்திற்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த வாகனத்தில் பயணித்த 2 வயதான குழந்தை உள்ளிட்ட மூவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரின் வாகனமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் 2 வயதான குழந்தை, 11 வயதான சிறுவன் உள்ளிட்ட மூவரே காணாமல் போயுள்ளனர்.
இந்த நிலையில், 11 வயதான சிறுவன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. (TrueCeylon)