முன்னாள் அமைச்சர் டி.பீ.ஏக்கநாயக்க தனது 67வது வயதிலேயே காலமானார்.
குருநாகல் பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, அவர் காலமானதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இறுதியாக நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட போதிலும், அவர் பாராளுமன்றத்திற்கு தெரிவாகவில்லை. (TrueCeylon)