முன்னறிவித்தல் எதுவும் இன்றி வாடிக்கையாளர்களிடம் வணிக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களினால் அறவிடப்படும் பல்வேறு கட்டணங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நிதி அமைச்சு, மத்திய வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இவ்வாறான 20 வகையான அறவிடுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நிலைமை குறித்து ஆராய்ந்து, கட்டண அறவிடுகளை குறைப்பதற்கோ அல்லது ரத்து செய்வதற்கோ நடவடிக்கை எடுக்குமாறு நிதி அமைச்சு, மத்திய வங்கியிடம் கோரியுள்ளது.
நிதி அமைச்சில் பிரதமர் தலைமையில் நாளை இடம்பெறவுள்ள கூட்டத்தின் போது, இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷேஹான் ஹேமசிங்க தெரிவித்துள்ளார். (TrueCeylon)
Discussion about this post