இலங்கை : பொலன்னறுவை – கதுறுவெல நகரின் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலன்னறுவை பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகம் தெரிவிக்கின்றார்.
இந்த பகுதி இன்று (06) மாலை முடக்கப்பட்டதாக பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் டபிள்யூ.கே.டபிள்யூ.குமாரவங்ச தெரிவிக்கின்றார்.
நகரிலுள்ள பிரதான உணவகங்கள் உள்ளிட்ட மேலும் பல வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், நகரின் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
குறித்த பகுதியில் 8 கொரோனா தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
கதுறுவெல பகுதியில் கடந்த காலங்களில் 20 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள், சிகிச்சைகளுக்காக கொவிட் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
கொவிட் தொற்றாளர்களும் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் டபிள்யூ.கே.டபிள்யூ.குமாரவங்ச தெரிவிக்கின்றார். (TrueCeylon)
Discussion about this post