கொவிட் 19 காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட அனைத்து மிருகக்காட்சிசாலைகள் சுகாதார வழிகாட்டுதல்களின்படி நாளை (01) முதல் மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தேசிய விலங்கியல் தோட்டத் துறை இயக்குநர் ஜெனரல் திருமதி இஷினி விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தெஹிவளை மிருகக்காட்சி சாலை வாரத்தில் 7 நாட்களும், பின்னவல யானைகள் சரணாலயம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு 3 நாட்களும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுக்கு 4 நாட்களும் திறந்திருக்கும்.
அதே நேரம் ரிதியகம மிருகக்காட்சிசாலைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் நேரத்தை ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.(Trueceylon)
Discussion about this post