மியன்மார் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்திலிருந்து சீனா விலகியுள்ள நிலையில், மியன்மாரின் யாங்கோனில் உள்ள சீனத் தூதரகத்திற்கு முன்பாக நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கூடி, ‘‘சீனாவே உனக்கு அவமானம்” என கோஷமிட்டுள்ளனர்.
அத்துடன், மியன்மாரில் ஏற்பட்டுள்ள இராணுவ ஆட்சிக்கு எதிராக சீனா குரல் கொடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு இளைஞர்கள் ஒன்று கூடி, இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதே நேரத்தில் இராணுவத்தை ஆதரிப்பதை நிறுத்துமாறு சீனாவை ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியுள்ளனர்.
”இராணுவத்திற்கு உதவுவதை நிறுத்து”, ”மியான்மார் இராணுவ சர்வாதிகாரம் என்பது” சீனாவில் தயாரிக்கப்பட்டது என எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
மியன்மாரில் 2020ம் ஆண்டு நடந்த தேர்தலின் ஊடாக மோசடி இடம்பெற்றதாக தெரிவித்து, ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கத்தை சூழ்ச்சியின் மூலம் வீழ்த்தி, இராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
இந்த இராணுவ ஆட்சிக்கு எதிராக உலகளாவிய ரீதியில் பாரிய எதிர்ப்பலைகள் எழுந்துள்ள பின்னணியிலேயே, சீனா இவ்வாறான தீர்மானமொன்றை எட்டியுள்ளது.
Discussion about this post