Tuesday, May 24, 2022
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
No Result
View All Result
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
No Result
View All Result
Trueceylon News (Tamil)
No Result
View All Result
Home இலங்கை

மாவனெல்லையில் தொடரும் அசம்பாவிதங்கள் – இன்றும் நேர்ந்தது அசம்பாவிதம் (PHOTO)

December 29, 2020
in இலங்கை, செய்திகள், பிரதான செய்தி
Reading Time: 1 min read
0
SHARES
237
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Telegram

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் மாவனெல்ல – ஹிகுல பகுதியிலுள்ள புத்த பெருமானின் உருவச்சிலை வைக்கப்பட்டுள்ள பீடத்தின் கண்ணாடி, அடையாளம் தெரியாத சிலரினால் உடைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்றைய தினம் (28) இடம்பெற்றுள்ளதாக மாவனெல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த தாக்குதல், இனவாத குழுவொன்றினால் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.

இதே புத்த பெருமானின் பீடத்திற்கு, இரண்டு வருடங்களுக்கு முன்னரும் சேதம் விளைவிக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை மாவனெல்ல பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

World Express Services World Express Services World Express Services
Photo Credit :- ADA

இதேவேளை, மாவனெல்ல – அளுத்நுவர நகரிலுள்ள புத்த பெருமானின் பீடமொன்றில் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது.

மூன்று தினங்களுக்கு முன்னர் இந்த கண்ணாடி உடைக்கப்பட்டிருக்கலாம் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியிலுள்ளவர்களிடம் பொலிஸார் வாக்குமூலத்தை பதிவு செய்துக் கொண்டுள்ளதுடன், சி.சி.டி.வி காணொளியின் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

Photo Credit :- ADA

ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னர், குறித்த குழுவினர் மாவனெல்ல பகுதியிலுள்ள புத்தர் சிலைகளை சேதப்படுத்தியிருந்தமை விசாரணைகளின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டது.

இவ்வாறான பின்னணியில், மாவனெல்ல பகுதியிலுள்ள கல் குவாரியொன்றில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த வெடிப்பொருட்கள் சில கடந்த வாரம் அடையாளம் தெரியாத நபர்களினால் களவாடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம், அரச புலனாய்வு திணைக்களம், இராணுவ புலனாய்வு பிரிவினர், பொலிஸார் என பல்வேறு கோணங்களின் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தநிலையிலேயே, புத்தர் சிலைகளும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது (TrueCeylon)

Tags: #கண்டி#பொலிஸார்அரச புலனாய்வு திணைக்களம்அளுத்நுவரஇராணுவ புலனாய்வு பிரிவினர்ஈஸ்டர் தாக்குதல்குற்றப் புலனாய்வு திணைக்களம்கொழும்புபுத்தர் சிலைமாவனெல்லஹிகுல
Previous Post

நுவரெலியாவிற்குள் பிரவேசித்த 85 பேருக்கு கொவிட்

Next Post

பிரித்தானியாவிலிருந்து இலங்கை வந்த இருவருக்கு கொவிட் – வீரியம் கொண்ட வைரஸ் பரவலா என பரிசோதனை தீவிரம்

Next Post

பிரித்தானியாவிலிருந்து இலங்கை வந்த இருவருக்கு கொவிட் - வீரியம் கொண்ட வைரஸ் பரவலா என பரிசோதனை தீவிரம்

  • Trending
  • Comments
  • Latest
ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களின் விபரங்கள் வெளியானது

இலங்கையில் வேகமாக பரவும் பிரித்தானிய வைரஸ்! அடுத்து வரும் நாட்கள் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

May 13, 2021
இலங்கை : இரவிரவாக தொடரும் தமிழர் போராட்டம் (VIDEO)

இலங்கை : இரவிரவாக தொடரும் தமிழர் போராட்டம் (VIDEO)

January 9, 2021
அரசியல் பிரவேசத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்

அரசியல் பிரவேசத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்

December 29, 2020
பலரது தொலைபேசிகளிலிருந்து நாளை விடை பெறுகின்றது WHATSAPP

பலரது தொலைபேசிகளிலிருந்து நாளை விடை பெறுகின்றது WHATSAPP

October 31, 2021

கொவிட் தொற்றில் உயிரிழப்போரின் உடல்கள் புதைக்கப்படும் − பிரதமர் உறுதி

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணி – தடைகளை தாண்டி தொடர்கின்றது (PHOTOS)

மூழ்கிய இந்திய மீனவப் படகிலிருந்து இரு சடலங்கள் மீட்பு

இறக்குவானை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதா?

மஹிந்தவுக்கு மாலைதீவில் அடைக்கலம்! பரபரப்பை ஏற்படுத்தியுள்ள செய்தி

மஹிந்தவுக்கு மாலைதீவில் அடைக்கலம்! பரபரப்பை ஏற்படுத்தியுள்ள செய்தி

May 24, 2022
CIDக்கு முன்னால் பதற்றம்

CIDக்கு முன்னால் பதற்றம்

May 24, 2022
நாளை பேருந்துகள் சேவையில் ஈடுபடுமா? தீர்மானம் வெளியானது

பேருந்து கட்டணமும் கிடுகிடுவென உயர்ந்தது

May 24, 2022
WHO-வின் இலங்கைக்கான பிரதிநிதியை சந்தித்தார் ரணில்

WHO-வின் இலங்கைக்கான பிரதிநிதியை சந்தித்தார் ரணில்

May 24, 2022

Recent News

மஹிந்தவுக்கு மாலைதீவில் அடைக்கலம்! பரபரப்பை ஏற்படுத்தியுள்ள செய்தி

மஹிந்தவுக்கு மாலைதீவில் அடைக்கலம்! பரபரப்பை ஏற்படுத்தியுள்ள செய்தி

May 24, 2022
567
CIDக்கு முன்னால் பதற்றம்

CIDக்கு முன்னால் பதற்றம்

May 24, 2022
395
நாளை பேருந்துகள் சேவையில் ஈடுபடுமா? தீர்மானம் வெளியானது

பேருந்து கட்டணமும் கிடுகிடுவென உயர்ந்தது

May 24, 2022
504
WHO-வின் இலங்கைக்கான பிரதிநிதியை சந்தித்தார் ரணில்

WHO-வின் இலங்கைக்கான பிரதிநிதியை சந்தித்தார் ரணில்

May 24, 2022
252
Trueceylon News (Tamil)

Copyright © 2022 Trueceylon.lk All Rights Reserved

Navigate Site

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு

Copyright © 2022 Trueceylon.lk All Rights Reserved