மாதவிடாய் சுகாதார குட்டைகளுக்கான விலைகளில் மாற்றம் ஏற்படாது என வர்த்தக அமைச்சு தெரிவிக்கின்றது.
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கும், மாதவிடாய் சுகாதார குட்டை தயாரிப்பு நிறுவனங்களின் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பிலேயே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மாதவிடாய் சுகாதார குட்டைகளுக்காக கடந்த அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட 30 வீத வரி, இந்த முறை வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக 15 வீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக நிறுவனங்களின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
எஞ்சிய வரித் தொகை செச் வரியாக இந்த முறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்
எனினும், மாதவிடாய் சுகாதார குட்டைகளுக்கு சந்தையில் தற்போது காணப்படும் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படாது என அவர்கள் உறுதியளித்துள்ளனர்.
2018ஆம் ஆண்டு ஒரு கிலோகிராம் மாதவிடாய் சுகாதார குட்டைகளுக்காக அறவிடப்பட்ட 300 ரூபா இறக்குமதி வரியை மீண்டும் அறவிட நடவடிக்கை எடுக்குமாறு மாதவிடாய் சுகாதார குட்டைகளை தயாரிக்கும் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
உள்நாட்டில் 100 வீதம் மாதவிடாய் சுகாதார குட்டைகள் உற்பத்தி செய்யப்படுமாக இருந்தால், சுகாதார குட்டைகளுக்கான இறக்குமதி செய்யும் தேவை கிடையாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.