மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு முன்னர், நாட்டு மக்களை கொவிட் தொற்றிலிருந்து பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, ட்ரூ சிலோன் செய்திப் பிரிவிற்கு இதனைக் குறிப்பிட்டார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலை தற்போது கிடையாது என கூறிய அவர், கொவிட் வைரஸ் நாடு பூராகவும் பரவியுள்ளதாகவும் தெரிவித்தார்.
தேர்தலை நடத்தும் பட்சத்தில், அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதுடன், மாகாண சபைத் தேர்தலுக்காக செலவிடப்படும் பணத்தை கொவிட் ஒழிப்புக்கான தற்போது செலவிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, மாகாண சபை முறைமை ஒழிக்கப்படும் என வெளியிடப்பட்டுள்ள கருத்து தொடர்பிலும் அவர் தமது நிலைப்பாட்டை வெளியிட்டார்.
வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைக்கான தீர்வாக கொண்டு வரப்பட்ட 13வது திருத்தத்தை இல்லாது செய்ய வேண்டும் என்றால், அந்த மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையிலான தீர்வொன்றை வழங்கியதன் பின்னரே அதனை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்துகின்றார்.
எனினும், மாகாண சபை முறைமையை இல்லாது செய்ய வேண்டும் என்றால், இந்தியாவுடன் கட்டாயம் கலந்துரையாட வேண்டும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
எனினும், மாகாண சபை முறைமை இல்லாது செய்யப்படக்கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவிக்கின்றார்.(TrueCeylon)
Discussion about this post