மஹர சிறைச்சாலை கலவரத்தால் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் குரலெழுப்ப ஆரம்பித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் பேராசிரியர் ரோஹண லக்ஸ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மஹர சிறைச்சாலை பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் தீர்க்காவிட்டால் நாட்டுக்கு பெரும் சிக்கல் ஏற்படலாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.