இலங்கை : மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது உயிரிழந்த 11 பேரும், துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளமை இன்று (08) உறுதியாகியுள்ளது.
வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைகள் இன்று இடம்பெற்ற போதே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கி பிரயோகத்தினால் ஏற்பட்ட கடும் காயங்களினாலேயே 11 பேரும் உயிரிழந்துள்ளதாக, இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்திய புத்திஜீவிகள் குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த 8 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கைகள் இதற்கு முன்னர் நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், எஞ்சிய 3 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கைகள் இன்று நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்டன. (TrueCeylon)
Discussion about this post