மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் காயமடைந்து, ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதிகளில் 26 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 71 கைதிகளில், 48 கைதிகளுக்கு ரெபிட் அன்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு நடத்தப்பட்ட பரிசோதனைகளில், 26 கைதிகளுக்கு கொவிட் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ராகமை வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் சரத் பிரேமசிறி தெரிவிக்கின்றார்.
இதேவேளை, மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ் மாஅதிபருக்கு, பாதுகாப்பு செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். (True Ceylon)