மஹர சிறைச்சாலை அமைதியின்மையில் உயிரிழந்த 11 பேரின் சடலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ராகமை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
முதலில் 8 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், தற்போது அனைவரது சடலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார். (TrueCeylon)