மஹர சிறைச்சாலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட அமைதியின்மையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
அமைதியின்மையில் காயமடைந்து, ராகமை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதியொருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதன்படி, இந்த அமைதியின்மையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது.
ராகமை வைத்தியசாலையில் பணிப்பாளர் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துடன், இந்த சம்பவத்தில் காயமடைந்தோரின் எண்ணிக்கை 109ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு காயமடைந்தவர்களில் இரண்டு அதிகாரிகளும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குற்றவாளிகள், சந்தேகநபர்கள் ஆகியோருக்கும் இடையிலும் மோதல் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த நிலையில், இன்று அதிகாலையும் சில கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இறுதியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் அனைவரும், சிறு காயங்களுக்கு உள்ளானவர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை வாக்குமூலங்களை பதிவு செய்துக்கொள்ள முடியவில்லை என அவர் குறிப்பிடுகின்றார். (True Ceylon)