மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் விசாரணைகளை நடத்தி, பரிந்துரைகளுடனான அறிக்கையொன்றை தயாரிப்பதற்காக ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நீதி அமைச்சர் அலி சப்ரியினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்ன தெரிவிக்கின்றார்.
- மேல் நீதிமன்றத்தின் ஓய்வூப் பெற்ற நீதிபதி குசலா சரோஜனி வீரவர்தன – தலைவர்
- நீதி அமைச்சின் பிரதம சட்ட ஆலோசகர், ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி.சில்வா – உறுப்பினர்
- நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் (நிர்வாகம்) – ரோஹண ஹபுகஸ்வத்த – உறுப்பினர்
- பிரதி பொலிஸ் மாஅதிபர் – அஜித் ரோஹண – உறுப்பினர்
- முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி ஜயசிங்க – உறுப்பினர்
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் நிஷான் தனசிங்க, இந்த குழுவின் செயலாளராக கடமையாற்றவுள்ளார். (True Ceylon)