நாட்டில் பெய்யும் மழையுடனான வானிலையினால் கிழக்கு, ஊவா மாகாணங்களும், பொலன்னறுவை, மாத்தளை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களும் அதிக அச்சுறுத்தல் மிக்க பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இடியுடனான மழை வீழ்ச்சி பதிவாகும் காலப் பகுதியில் காற்றுடன் கூடிய வானிலை நிலவும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. (TrueCeylon)